ஆனந்த சங்கரியின் பொதுக்குழு மற்றும் மத்திய குழுக் கூட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியினால் எதிர்வரும் 2022.03.19ம் திகதி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படவிருந்த பொதுக்குழு மற்றும் மத்திய குழுக் கூட்டங்களுக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணபதிப்பிள்ளை யோகராஜா தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தன்னிச்சையாக இதுவரை கட்சியுடன் தொடர்பில்லாத ஒரு குழுவினரிடம் கட்சியைக் கையளிக்கும் நோக்குடன் எதிர்வரும் 19.03.2022 ம் திகதி கிளிநொச்சியில் பொதுக்குழு மற்றும் மத்திய குழுக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் இக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கக் தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிருவாகத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ் வழக்கானது நேற்று(16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கிளிநொச்சி நீதிமன்றம் குறித்த கூட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது.
சமீபகாலமாக வீ.ஆனந்தசங்கரி கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களை ஓரம் கட்டிவிட்டு, கட்சிக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத புதிய உறுப்பினர்களை கட்சியின் முக்கிய பதவிகளுக்கு இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவரின் இத்தகைய முற்சிகளைத் தடுத்து, கட்சியை காப்பாற்றி, அதன்
நோக்கம், கொள்கைகளுக்கு அமைவாக வழிநடத்த புதிய நிர்வாகம் எடுத்துவரும்
முயற்சிகளைக் குழப்பும் நோக்கத்திலேயே இவரால் இக்கூட்டங்கள் ஒழுங்கு
செய்யபப்பட்டிருக்கின்றது.
இதற்கு ஒருபோதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிருவாகம் இடம்கொடுக்காது
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam