வெலிகம பிரதேச சபைத் தலைவர் பாதாள குழுத் தலைவர் : விபரங்களை வெளியிட்ட அமைச்சர்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர அல்லது 'மிதிகம லசா' பாதாள குழுக்கிடையிலான மோதலிலேயே கொல்லப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை அங்கீகாரம் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் (அத்தியாயம் 52) – அங்கீகாரம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொது பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் பிரதிநிதியாக லசந்த விக்கிரமசேகர தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் பல திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கெதிராக ஆறு வழக்குகள் உள்ளன.மாத்தறை மேல் நீதிமன்றத்தில் 2 ,குருநாகல் மேல் நீதிமன்றத்தில் 2,காலியிலும் வழக்கு உள்ளது.மேலும் சிறைத்தண்டனை பெற்றுள்ளதோடு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையிலேயே இருந்துள்ளார்.
இந்த சம்பவத்தால் பொது பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.பாதாள குழுக்களுக்கிடையில் மோதல் நடைபெறுகிறது.அதில் எவ்வித வாதமும் இல்லை.அவ்வாறான ஒன்றே வெலிகம சம்பவமும் ஆகும்.
இவர்களுக்கிடையே ஆயுதங்களும் இருக்கின்றன. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்திலும் இவரிடம் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அது தொடர்பிலும் விசாரணைகள் நடைபெறுகின்றன.
போதைப்பொருள் விற்பனையில் ஈட்டிய வருமானம் தொடர்பிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியிலும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இருப்பதாக மே 27 ஆம் திகதியும் நான் தெரிவித்திருந்தேன் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு உள்ள வாய்ப்பு: பாகிஸ்தானை வீழ்த்தினாலும் இது நடக்க வேண்டும் News Lankasri
