அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வரப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
லசந்த விக்ரமசேகர கொலை
தொடர்ந்து பேசிய அவர்,

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை வெலிகம பிரதேச சபையின் தலைவராக்க முடியாத கோபத்துக்கு பாதாள குழுவினர் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை செய்யப்பட்டதை சாதாரணப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவர் பாதுகாப்பு கோரியும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாமை அவரை கொலை செய்யும் தேவை அரசாங்கத்திற்கு இருந்ததாகவே எமக்கு நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது.
பொறுப்பற்ற செயற்பாடு
ஆனால் நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு கதைப்பது பொறுப்பற்ற செயற்பாடாகும்.அது தொடர்பில் விசாரணை செய்வதாக அல்லது பரிசோதனைகள் நடைபெறுவதாவே குறிப்பிட வேண்டும்.
ஐக்கி மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால் முதலில் அவருக்கு அறிவிக்க வேண்டும்.அதை விடுத்து பொலிஸாரை அனுப்பி பூச்சாண்டி காட்ட வேண்டாம்.
இவர்களின் நோக்கம் எதிர்க்கட்சியினரை ஒழித்துக் கட்டிவிட்டு தனி கட்சியாக ஆட்சி நடத்தப் போகிறதோ தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.