மட்டக்களப்பு மாவட்டத்தில் பரிதாப நிலையில் 700 சிறுவர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் எதுவித பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று(14.08.2025) அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
“இந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக இருக்கலாம்.
பாதுகாப்பு நடவடிக்கை
அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, கல்வி தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அத்தோடு நாடு முழுவதும் 14,000 சிறுவர்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் 2000 சிறுவர்கள் பாதுபாப்பற்று இருக்கின்றனர். அனைத்து சிறுவர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




