கொழும்பில் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்
கொழும்பு, மருதானை-டெக்னிக்கல் சந்தியிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேற்று மதியம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு குறித்த பெண், ஆண் ஒருவருடன் விடுதிக்கு சென்ற நிலையில் குறித்த நபர் அங்கிருந்து வெளியேறிய போதும் மீண்டும் திரும்பி வரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
விடுதி அறை
குறித்த பெண்ணும் ஆணும் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வந்து விடுதியின் இரண்டாவது மாடியில் அறை ஒன்றை முன்பதிவு செய்தனர்.
பின்னர் ஆண் விடுதியை விட்டு வெளியேறி மது போத்தலுடன் திரும்பி வந்துள்ளார். அவர் பசறை பிரதேசத்தில் வசிப்பவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை அவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டிய போதிலும் மதியம் வரை வெளியேறாமையினால் விடுதியின் முகாமையாளர் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டார்.
பொலிஸார் விசாரணை
அறையின் கதவு ஏற்கனவே பூட்டப்பட்டிருந்தது, மேலும் விடுதியின் முகாமையாளர் படுக்கையில் பெண் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் வந்து அறையை ஆய்வு செய்தபோது, உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்தப் பெண்ணின் ஆடைகள் அடங்கிய இரண்டு பைகள் மட்டுமே அங்கு காணப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




