ஜனநாயகத்தை பாதுகாக்க விடுதலைப்புலிகள் அமைப்பு முன்வைத்த கோரிக்கை: ஆனந்தசங்கரி விளக்கம்(Video)
இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாக்க தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தனர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு எம்மை சார்ந்த சமூகத்தினர் அனைவரும் ஜனநாயக ரீதியான நல்லிணக்கத்தை பெறுவதற்கு எதிர்பார்த்திருந்தனர். எனினும் சில மாறான செயல்கள் மூலம் அவை அனைத்தும் இல்லாது செய்யப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் இடம்பெறும் ஜனநாயக சீர்கேடு காரணமாக, அமைச்சர்கள் மற்றும் பல முக்கியபிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளார் எனவும் இதன்போது குற்றம் சுமத்தினார்.
இவை அனைத்திற்கும் ஒரு முடிவை கொண்டு வருவதற்காகவே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு கோரிக்கையை முன்வைத்தனர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் ஜனநாயக சீர்கெடுக்கான தீர்வை பெற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஆனந்த சங்கரி தெரிவித்த கருத்துக்களை தொடரும் காணொளியில் காணலாம்...





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
