ஒடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: டிரன் அலஸ்ஸூக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

Tiran Alles Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Dec 22, 2023 01:29 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைவஸ்துக்களுக்கு எதிரான யுக்திய என்ற செயற்பாடு தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸூக்கு வெளிநாட்டு பாதாள உலக முக்கியஸ்தர் ஒருவரிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்தே, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸூக்கு இந்த அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

மாநாடு நிறைவடைந்த சிறிது நேரத்திலேயே, அமைச்சர் அலஸுக்கு அநாமதேய அழைப்பு வந்துள்ளது.

யாழில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 6 பேர் கைது

யாழில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 6 பேர் கைது

பாதுகாப்பிற்கு எதிராக அச்சுறுத்தல்

இதன்போது அமைச்சர், தமது தொலைபேசியின் ஒலியை வெளியில் கேட்குமாறு செய்து முழு உரையாடலையும் பதிவு செய்யுமாறு தமது ஊடக செயலாளரை பணித்துள்ளார்.

ஒடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: டிரன் அலஸ்ஸூக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் | An Underworld Threat To Duran Alas

இதன்போது தொலைபேசியில் அழைத்தவர், அமைச்சரின் பாதுகாப்பிற்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“இன்னும் ஏழு பூரணை நாட்களுக்குள் கவனித்துக்கொள்கின்றேன்” என அவர் சபதம் செய்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் அலஸும், 'இதை ஏழு பூரணை நாட்களில் அல்ல இரண்டு பூரணை நாட்களில் செய்து முடிப்பேன் என்றும் தேவையானதைச் செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி - சிவா மயூரி

இலங்கை சென்ற அமெரிக்க தமிழர் அமைப்பின் பிரதிநிதி அதிரடி இடைநீக்கம்

இலங்கை சென்ற அமெரிக்க தமிழர் அமைப்பின் பிரதிநிதி அதிரடி இடைநீக்கம்

பெண் உட்பட 4 வியாபாரிகள் கைது

மேலும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் பலர் கைதசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

இதன்படி, மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை மேப்ப நாய் சகிதம் இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஒடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: டிரன் அலஸ்ஸூக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் | An Underworld Threat To Duran Alas

குறித்த சுற்றிவளைப்பானது, நேற்று (21) அதிகாலை 2 மணிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது, கேரளகஞ்சா, ஹரோயின், ஜஸ்போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 வியாபாரிகளை கைது செய்ததுடன் பெருமளவிலான போதை பொருள்கள் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற புலனாய்வு மற்றும் இரகசிய தகல்களின் அடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் போதை பொருள் வியாபரிகளின் வீடுகளை தேடி மேப்ப நாயுடன் முற்றுகையிட்டு அதிகாலை 6 மணிவரை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளாகஞ்சா மற்றும் ஹரோயின், ஜஸ்போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 வியாபாரிகளை கைது செய்துள்ளனர்.

செய்தி - சரவணன்

உருளைக்கிழங்கு விதை தொடர்பில் வலுத்துள்ள சந்தேகம்: யாழ். உற்பத்தியாளர் சங்கம் விசனம்

உருளைக்கிழங்கு விதை தொடர்பில் வலுத்துள்ள சந்தேகம்: யாழ். உற்பத்தியாளர் சங்கம் விசனம்

ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் கைது

மேலும், குருநாகல் மாவட்டத்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளர் ஒருவர் போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: டிரன் அலஸ்ஸூக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் | An Underworld Threat To Duran Alas

இந்தநிலையில் குறித்த நடவடிக்கையை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹார்மி வரவேற்றுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் போதைப்பொருளுடன் விளையாடுபவர்கள் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.

அது ஐக்கிய மக்கள் சக்தியின் எவராகவும் இருக்கலாம் என்றும் ஹெக்டர் அப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.

செய்தி - சிவா மயூரி

200 இல் மலையகம்: மாற்றத்தை நோக்கிய பயணத்தின் அடுத்தக்கட்டம் நுவரெலியாவில்

200 இல் மலையகம்: மாற்றத்தை நோக்கிய பயணத்தின் அடுத்தக்கட்டம் நுவரெலியாவில்

பெண் வியாபாரி கைது

அத்தோடு, மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள 10 ஆம் கட்டை பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீடை முற்றுகையிட்ட பொலிஸார் ஒரு கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் பெண் வியாபாரி ஒருவரை நேற்று (21) மாலைகைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

ஒடுக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: டிரன் அலஸ்ஸூக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் | An Underworld Threat To Duran Alas

மேலும், மாவட்ட குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் குறித்த வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஓரு கிலோ 565 கிராம் கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரியான பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தி - சரவணன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US