இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அரிய வாய்ப்பு
இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று(09.09.2023) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
டிக்கெட் விலை
அதேவேளை ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் (Lower Block) சி மற்றும் டி பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் 1,000 ரூபாவுக்குவாங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை(10.09.2023) போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நாளை(10.09.2023) செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam
