வவுனியாவில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா - நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்றைய தினம் (05.03.2024) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் கற்குவாரி ஒன்றில் சடலம் கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதி மக்கள் ஓமந்தை பொலிஸபருக்கு தகவல்தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதனால் குறி்த்த நபர் சில தினங்களிற்கு முன்னதாகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிசார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri