உலை எண்ணெய் நிரம்பி வழிவது எண்ணெய் கசிவென்று கருத முடியாது - ஆனந்த பாலித
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் குழிகள் மற்றும் தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எரிபொருள் விடயத்தில் போதிய மேற்பார்வையின்மை காரணமாகவே சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உலை எண்ணெய் நிரம்பி வழிந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கமான தேசிய சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்த எண்ணெயை நிரம்பி வழிவது எண்ணெய் கசிவு என்று கருத முடியாது.கச்சா எண்ணெயாகக் கருதப்படுகிறது.
இந்த எண்ணெய் குழிகள் சரியான மேற்பார்வை செய்யப்பட வேண்டும், ஏனெனில் அவை நிலத்தடியில் சேமிக்கப்படுகின்றன என்று ஆனந்த பாலித குறிப்பிட்டார்.
இந்தநிலையில் இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை கடற்படை
மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் வெள்ளநீரில் இருந்து உலை எண்ணெயைத்
தவிர்ப்பதற்கும், மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.