பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது
40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 117,000 கனேடிய டொலர்களையும் 19,000 யூரோக்களை பாதுகாப்ப அதிகாரிகள் கைப்பறியுள்ளனர். 45 வயதான இந்திய வர்த்தகரான குறித்த பயணி வர்த்தக நிமித்தம் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு செல்லவிருந்தார்.
10 ஆயிரம் ரூபா அபராதம்
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக அவருடன் இருந்த வெளிநாட்டு நாணயங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
எவ்வாறாயினும், வெளிநாட்டு நாணயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
