இன்றிரவு மின்துண்டிப்பு ஏற்படலாம்! வெளியானது அறிவிப்பு
நாட்டில் இன்று மாலை 6.30 தொடக்கம் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் சுமார் ஒரு மணிநேர மின் துண்டிப்பு ஏற்படலாம் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதிகரித்த மின்சார கேள்வியின் காரணமாக இந்த நிலை ஏற்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.
பெப்ரவரி மாதம் முழுவதும் மின்சாரத் தேவையை நிர்வகிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார்.
அதன்படி இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட ஜனவரி 25 ஆம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதிவரையான மின் துண்டிப்பு தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
அத்துடன், மறு அறிவித்தல்வரை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



