முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வைபவம், நேற்றைய தினம் வியாழக்கிழமை (22.02.2024) வித்தியாலய அதிபர் எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களால் புதிதாக முதலாம் தரத்திற்கு இணையும் மாணவர்களுக்கும் மலர்மாலை அணிவித்து பாடசாலை வளாகத்திற்குள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று, முதலாம் தரத்திற்கு வருகைதந்த மாணர்வகளை வரவேற்று அதிபர், ஆசிரியர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளன.
கல்முனை அஸ்-ஸுஹறா பாடசாலை
கல்முனை அஸ்-ஸுஹறா பாடசாலைக்கு 2024ஆம் ஆண்டுக்கான தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் வித்தியாரம்ப விழா நேற்று அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி கலந்து சிறப்பித்துள்ளார்.
இறுதியாக ஏடு துவங்கும் நிகழ்வுடன் அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - சிஹான் பாரூக்
கட்டைக்காடு பாடசாலை
வடமராட்சி - கிழக்கு, கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 1 மாணவர்களை இணைக்கும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் யோகலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களும் விருந்தினர்களும் மாலை அணிவிக்கப்பட்டு
வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
செய்தி - எரிமலை
கெருடா பாடசாலை
யாழ். கெருடாவில் இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் நேற்று புது முக மாணவர்களின் வரவேற்பு விழா பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதுமுக மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசியக் கொடியேற்றல், மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மரக்கன்றுகளும்
நாட்டிவைக்கப்பட்டுள்ளன.
செய்தி - எரிமலை
யாழ். கேவில் பாடசாலை
யாழ். கேவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்று பாடசாலை அதிபர் தலைமையில் கால்கோள் விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முதலாம் வருடத்தில் இணைந்து கொண்ட மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அதிபரும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
செய்தி - எரிமலை
வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயம்
யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலத்தின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது, தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்று வித்தியாலயத்திற்கு உள்ளீர்த்துள்ளனர்.
செய்தி - எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri
