முல்லைத்தீவில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
முல்லைத்தீவில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வானது தண்ணீரூற்று பரி.மத்தியா முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை, கூழாமுறிப்பு, சிலாவத்தை பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களே நேற்று (25.11.2024) இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு முதல் நிகழ்வாக உயிர்த் தியாகம் செய்த மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தீபனால் (முன்னாள் போராளி) பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அகவணக்கம் மலர் அஞ்சலி
இதன்போது அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் மாவீரர்கள் இந்த மண்ணிற்கு ஆற்றிய உயிர்த்தியாகம் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு செம்பியன் பற்று வடக்கு இளைஞர்கள் மற்றும் மக்களால் மாவீரர்கள் மற்றும் இறுதி போரில் களத்தில் காணமாக்க பட்டோரின் உரித்துடையோர் கௌரவிக்க பட்டனர்

இந் நிகழ்வானது இன்று 26 மாலை 5மணியளவில் செம்பியன் பற்று வடக்கு கடல்தொழிலாளர் மண்டபத்தில் இடம்பெற்றது .
நிகழ்வில் இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஒருவரால் நினைவேந்தல் சுடர் ஏற்றி உரித்துடையோர்க்கு சிறிய உலர் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 

 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        