வாக்கு சீட்டை முகநூலில் பதிவிட்ட முக்கியஸ்தர் : பொலிஸ் விசாரணை தீவிரம்
வாக்கு சீட்டை முகநூலில் பதிவிட்ட ஈபிஆர்எல்எப் கட்சியின் உயர் பீட உறுப்பினர் மீது வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து கைத்தொலைபேசியும் இன்று (07.09.2024) பகுப்பாய்வுக்காக பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு குழுக்கள்
தபால் மூல வாக்களிப்பானது கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையில் 5 ஆம் திகதி மாலை தனக்கு சொந்தமான முகப்புத்தகத்தில் ஈபிஆர்எல்எப் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், பொது வேட்பாளரை ஆதரிக்கும் பொதுகட்டமைப்பின் வவுனியா மாவட்ட நிதி கையாளுகைக்கு பொறுப்பாளருமான க.அருந்தவராசா (மேழிக்குமரன்) சங்கு சின்னத்திற்கு புள்ளடியிடப்பட்ட வாக்கு சீட்டை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் என்பவற்றுக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய உதவித் தேர்தல் ஆணையாளரால் வவுனியா பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, அந்த நபரை அழைத்து விசாரணை நடத்தி வவுனியா பொலிஸார் அவரது கைத்தொலைபேசியை பெற்று அதனை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை சங்கு சின்னத்திற்கு புள்ளடியிட்ட வாக்கு சீட்டை படமெடுத்த ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam