சதுப்பு நிலத்தில் சிக்கிய யானை - உடனடி நடவடிக்கை கோரி விவசாயிகள் அவசர வேண்டுகோள்
யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சேற்றுக்குள் சிக்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த யானையின் நிலைமையை உடனடியாக ஆராய்ந்து, அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் தொடர்பில் யானை சரிந்து உயிருக்குப் போராடும் நிலையில் காணப்படுகின்றது.
விவசாயிகள் அவசர வேண்டுகோள்
இந்த நிலைமை தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் கவனம் செலுத்த வேண்டிய அவசியமான நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகக் குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, யானையின் நிலைமையை நேரில் பரிசோதித்து, அதனைச் சேற்றிலிருந்து மீட்டுப் பாதுகாப்பதற்கான உரிய அவசர சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர