வங்கியில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற விமானப்படை சிப்பாய்
அம்பலாங்கொடை, உஸ்முதுலாவ கிராமிய வங்கியில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற விமானப்படை சிப்பாய் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானப்படை சிப்பாய் கைக்குண்டு ஒன்றை காட்டி கிராமிய வங்கியின் முகாமையாளரை அச்சுறுத்தி விட்டு, அங்கிருந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து கிடைத்த தகவலை அடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டையும் விளையாட்டு துப்பாக்கியை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
