நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை திருத்தியமைக்க முடியாது! ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
சர்வதேச நாணய நிதியத்துடனான (International Monetary Fund) உடன்படிக்கையை எந்தவொரு ஆட்சியாளரும் திருத்தி அமைக்க முடியாது என்று நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று (13) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
[
வரிச்சுமையைக் குறைத்தல்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மக்களின் ஆணையைப் பெற்று தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையைத் திருத்தி அமைக்கப் போவதாக சில அரசியல்வாதிகள் கூறித் திரிகின்றனர்.
அவ்வாறான வாக்குறுதிகளை அளித்து ஒருசில அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் அவர்களின் கூற்று அடிப்படையற்றது வரிச்சுமையைக் குறைத்து நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கான வழிமுறை என்ன என்பதை அவர்கள் பொதுமக்களுக்குத் தெளிவுபபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |