இலங்கை - இஸ்ரேலுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய உடன்படிக்கை
இலங்கையிலிருந்து இஸ்ரேலின் விவசாயத்துறைக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்காக இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையில் உடன்படிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் நேற்று (22.11.2023) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
முதல் தர பாதுகாப்பு
“இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகை, குடிவரவு மற்றும் பிரதேச ஆணையம், அந்நாட்டினுடைய விவசாயத்துறைக்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்க்கின்றது.
இதனைத்தொடர்ந்து, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் இந்த உடன்படிக்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு முதல் தர பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை நான் உறுதியளிக்கிறேன்” என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
