மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியின், மருதமுனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று வியாழக்கிழமை (28.08.2025) காலை மருதமுனை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கடமை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபை காவலாளி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிகின்றன.
இவ் விபத்தில் உயிரிழந்தவர், கல்முனை மாநகர சபையில் காவலாளி கடமை புரிகின்ற பாஸ்கரன் என்பவர் என தெரியவருகிறது.
கடமை முடிந்து பெரியநீலாவணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையிலே விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.
சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
