யாழ். வடமராட்சி மீனவர்களின் வலையில் சிக்கிய 8 அடி நீளமான கோமராசி மீன்
யாழ். வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு மீனவர்களின் வலையில் கோமராசி மீனொன்று சிக்கியுள்ளது.
கட்டைக்காடு பகுதியில் நேற்று மாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் சிக்கியுள்ளது.
சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்து வந்து கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.
வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை. சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் சிக்கியுள்ளது.
ஆழ்கடலில் வசிக்கும் இம்மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
