இரண்டு வாரங்களில் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு தீர்வு : திலும் அமுனுகம உறுதிமொழி
இரண்டு வாரங்களில் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
படிப்படியாக மாவட்டங்களுக்கான உரப் பிரச்சினை தீர்த்துக் கொண்டு வருகின்றோம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது போதிய அளவு உரங்கள் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த உரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த விடயம் பற்றி கருத்து தெரிவிக்க தேவையில்லை.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்ற அதிகளவான பேருந்துகள் வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் செல்கின்றது. அதற்கான தீர்வுகளும் மிக விரைவில் எடுத்துக் கொடுக்கப்படும். அவர்கள் இதுவரை எங்களிடம் வீதி அனுமதிப்பத்திரம் சம்பந்தமாக பேசவில்லை. அவர்கள் பேசும் பட்சத்தில் அவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.
தற்போது தான் பிரச்சனை இருக்கின்றது என்பது அறியப்படுகின்றது. ஆகவே அவர்களை அழைத்து பேசி அவர்களுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு எதிர்காலத்தில் முயற்சி எடுக்கப்படும்.
உண்மையில் மனவேதனை அடைகின்றேன் தமிழ் மொழி புறக்கணிப்பு. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் அதைப் பார்த்திருக்க வேண்டும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது நான் இவ்விடத்தில் ஏற்றுக் கொண்டு எனது மன்னிப்பை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இலங்கையிலேயே மிகவும் போற்றத்தக்கவர்கள் சாரதிகள் அவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வானது அவர்களது சேவை காலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எமது அமைச்சின் ஊடாக ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு ஒரு பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சாகும்வரை அந்த பாஸ் மூலம் இலங்கை போக்குவரத்து பஸ் சேவையில் அவர்கள் பயணம் செய்யலாம்.
அவர்களுக்கு நாங்கள் வழங்கும் ஒரு கௌரவமாக இதை கொடுக்கின்றோம். சாரதிகள் மிகவும் போற்றத்தக்கவர்கள் எதிர்கால சந்ததியினருக்கும் அவர்கள் நல்வழி காட்டிகளாக இருக்க வேண்டும். கோவிட் காலத்திலும் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றியவர் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri