அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அநுரவுக்கு எதிராக பேசியதும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன்..!
அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்வதற்கான உத்தரவு மட்டக்களப்பு நீதிமன்றத்தால் கடந்த 25ஆம் திகதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ICCPR சட்டத்தின் கீழ் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே 2023/10/23 அன்று செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது சுமனரத்த தேரரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததாக கஹந்தகமகே தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில், நுகேகொடை பேரணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் பழிவாங்குவதற்காக கூட அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று சமூகசெயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.
இரண்டுவருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டதற்கு காரணம் இதுவாகத்தான் இருக்கும்.
அன்றைய காலப்பகுதியில் அவரை கைது செய்திருந்தால் பிக்குவை கைது செய்தார்கள் என்ற பிரச்சினை வெடித்திருக்கும் என்று குறிப்பிட்டார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயங்களை பற்றிய முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..