கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்! தாஹிர் எம்.பி
கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அதன் அதிகாரம் கட்சியின் செயலாளரிடமே உள்ளது என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக நாடளாவிய ரீதியில் தெரிவாகிய 140 உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (11) திருகோணமலை ஜேபாக் மண்டபத்தில் இடம்பெற்றது.
கட்சியின் கொள்கை
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வெற்றிபெற்ற 140 உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைகளோடு ஒத்துழைத்து செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இது கட்சியின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், கட்சி ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam