அம்பாறையில் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை
திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலம் நிலவி வரும் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள தவிசாளர் சசிகுமார் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச கால்நடை உரிமையாளர்களுக்கு திருக்கோவில் பிரதேச சபை திருக்கோவில் பொலிஸ் நிலையம் மற்றும் திருக்கோவில் மிருக வைத்தியசாலை என்பன இணைந்து இன்று (05) கலந்துரையாடல் நடாத்தினர்.
இதன்போது திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 05 மாதங்களுக்குள் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்ட வீதி விபத்துக்களினால் 02 மரணங்களும் அதிகளவான பொருட்சேதங்களும் இடம் பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
உடனடி நடவடிக்கை
எனவே கட்டாக்காலி மாடுகளை உரிமையாளர்கள் உரிய இடங்களில் கட்டி வீதிகளில் நடமாடுவதை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
அத்துடன் 2025.06.05 தொடக்கம் 2026.06.12 ஆம் திகதி வரை திருக்கோவில் மிருக வைத்தியசாலையில் தங்களது மாடுகளை அடையாளப்படுத்தி அவற்றினை உடனடியாக சட்டரீதியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் அவ்வாறு பதிவு செய்யப்படாத கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தண்டப்பணம் அறவிடப்படும் என்பதையும் 03 நாட்களுக்குள் மீட்கப்படாத கட்டாக்காலி மாடுகள் அனைத்தும் சட்டரீதியாக அரச உடமையாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
