விளையாட்டினால் வீதி போக்குவரத்திற்கு இடையூறு : நடவடிக்கை எடுக்கப்படுமா
அம்பாறை மாவட்டத்தின் பொதுப்போக்குவரத்திற்கான வீதியை சிலர் விளையாடுவதற்காக பயன்படுத்துதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அம்பாறை - கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட பல வீதிகளிலும் கிரிக்கட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுக்களை சிறுவர்கள் முதல் வயது வந்த பெரியோர்கள் வரை விளையாடி வருகின்றார்கள்.
இந்நிலையில், காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விளையாட்டுக்கள்
மேலும், அம்பாறையின் முக்கிய வீதிகளில் இவ்வாறான சட்டவிரோத விளையாட்டுக்கள் இடம்பெறுவதும் பின்னர் பிரச்சினைகளால் நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, இவ்வாறு விளையாடுபவர்களுக்கு பொதுப்போக்குவரத்தினை இடையூறு செய்வது தெரியாத விடயமல்ல.
மேலும், இவ்வாறான வீதி விளையாட்டுக்களை கட்டுப்படுத்த நாம் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |