அம்பாறை கல் ஓயா ஆற்றின் கரை உடைப்பு: மூழ்கிய விளைநிலங்கள்
அம்பாறையில் கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
சம்மாந்துறை அருகே நெய்னாகாடு பிரதேசத்தில் கல் ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுத்துள்ளது.
இதன் காரணமாக தீகவாபி, குடியிருப்பு பிரதேசங்களில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
விவசாயிகள் விமர்சனம்
குறித்த பிரதேசங்களில் நெற்கதிர்கள் முற்றிய நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கல் ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் குறித்து கடந்த சில நாட்களாக எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், அரசாங்கமும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அசிரத்தையாக செயற்பட்டதன் காரணமாக பல்லாயிரம் விளைநிலங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |