பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் (Video)
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பொதுமக்களினால் தடுத்து வைக்கப்பட்டதினால் சற்று குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் நடைபெறவிருந்த விசேட முகாமைத்துவக் குழு கூட்டம் குழப்பநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் இன்று(19.09.2023) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமாக இருந்த நிலையிலே இவர் பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
வருகை தந்த பொலிஸார்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து பொதுமக்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் அங்கு ஒன்று கூடிய மக்கள் உப பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் பிரஸ்தாபித்தனர்.

நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குண்டு வெடிக்கும்: கைதி ஒருவரின் பரபரப்பு தகவல் - நீதி அமைச்சர் விளக்கம்
இதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், விசேட முகாமைத்துவக் குழு கூட்டம் ஒன்றினை மேற்கொண்டு இதற்கான தீர்வொன்றினை பெற முயற்சிப்பதாக பொதுமக்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை உப பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளினால் இரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் மேற்கொண்டுள்ளதுடன் வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனாவுடன் முக்கிய கலந்துரையாடல்: இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
