இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஒருதொகை மஞ்சள் மீட்பு
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 20ஆயிரம் கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காலி ஹங்கம கலமண்டிய மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் வைத்து இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாகச் சிறப்பு அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மஞ்சளின் இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து தொடர்ந்தும் சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தி வரப்படுகின்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் மஞ்சள் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாகவே மஞ்சளின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகிறது.
எனினும் உள்ளூர் சந்தையில் மஞ்சளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam