டெங்கு தாக்கமுள்ள இடங்கள் குறித்து வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை எடுத்துள்ள தீர்மானம்
டெங்கு தாக்கமுள்ள இடங்களுக்கு புகையூட்டலுக்காக தேவையான அளவு எரிபொருளையே வழங்க முடியும் என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அந்த வட்டாரத்தில் உள்ள டெங்கு பெறவும் இடங்களை சுத்தப்படுத்துவதற்கான உதவிகளை எங்களுடைய பிரதேச சபை உறுப்பினர்களும் செய்வதுடன் பிரதேச சபையின் வளங்களும் அங்கு பயன்படுத்தப்படும்.
தேவையான அளவு எரிபொருள்
ஏற்கனவே பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் எமது பிரதேச சபைக்காக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது அந்த பொது சுகாதார பரிசோதகர் மீளப் பெறப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் பொது சுகாதார பணிமனை ஊடாக எமக்கு 400, 500 லீட்டர்கள் எரிபொருள் கோரிக்கை முன்வைத்த நிலையில் வழங்கி வந்தோம்.
இனிமேல் அதனை நிறுத்தி, டெங்கு அபாயம் காணப்படும் அந்தந்த பகுதிகளுக்கு தேவையான எரிபொருளை அவ்வப்போதே உடனுக்குடன் வழங்குவோம்.
ஏற்கனவே எமக்கு நியமிக்கப்பட்டது போல் அடுத்த ஆண்டுமுதல் மானிப்பாய் பிரதேச சபைக்கான பொது சுகாதார பரிசோதகர் நியமிக்கப்படும் பட்சத்தில்தான் அடுத்த ஆண்டுக்கான செலவினங்கள் குறித்து நாங்கள் தீர்மானிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



