கனடாவின் முக்கிய கொலைப் பின்னணியில் சிக்கிய அமித்ஷா மற்றும் ரோ
கடந்த ஆண்டு கனேடிய குடியுரிமை கொண்ட சீக்கியர் ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா மேற்கொண்ட விசாரணைகளின் தொடர்ச்சியில், படுகொலை செய்யப்படுவதன் பின்னணியில் இந்தியா இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில், கனடாவில் இருக்கக்கூடிய தேசிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் தலைவர், இந்தியாவினுடைய தலையீடுகள் கனடாவில் அச்சம் தரும் வகையில் அமைந்துள்ளது என்றும் குறிப்பாக படுகொலைகள் மாத்திரம் அல்ல பல குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் போஸ்ட் கனேடிய படுகொலைகளோடு இந்தியாவிலுள்ள இரு முக்கிய பிரமுகர்கள் தொடர்புபட்டு இருப்பதாக செய்தியை வெளியிட்டிருந்தது.
இதன்தொடர்ச்சியாக, இந்தியாவின் உள்துறை துறை அமைச்சர் அமித்ஷாவை மேற்கோள் காட்டுவதோடு, இந்தியாவின் சர்வதேச குற்றப்புலனாய்வு அமைப்பான ரோவையும் வொஷிங்டன் போஸ்ட் மேற்கோள் காட்டுகின்றது.
ஆகவே இந்த விடயம் அடுத்த பரிணாமத்தை நோக்கி கொண்டு செல்கின்றது என லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேரு குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலும் பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri