பெனு அன்னை புனித நீரூற்றை நோக்கிய தமிழர் திருயாத்திரை
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் வருடா வருடம் மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் Belgium ஏழைகளின் அன்னையாம் பெனு அன்னை புனித நீரூற்றை நோக்கிய, 27 வது வருட தமிழர் திருயாத்திரை இம்முறை எதிர்வரும் 10ஆம் திகதி (10.05.2025) நடைபெறவுள்ளது.
சிறப்பு நிகழ்வுக்காக காலை சிறப்பு குணமளிக்கும் நற்ருணை ஆராதனையும் மதியம் புனித நீர் நூற்றை நோக்கிய சிறப்பு மெழுகுதிரி பவனியும், அதே நேரம் மருத மடு அன்னையின் சிற்றாலயத்தில் வழிபாடும், மாலை திருநாள் திருப்பலியும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
யூபிலி ஆண்டை சிறப்பித்து..
நம்பிக்கையின் திருப்பயணிகள் சிறப்பு யூபிலி ஆண்டில் நம்பிக்கையின் அன்னை மரியா என்ற தலைப்பில் திருமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி போல் றொபின்கள் யூபிலி ஆண்டை சிறப்பித்து விழாவை சிறப்பாக தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளார்
இந்நிகழ்விற்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நெதர்லாது தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக நிர்வாகத்தினர் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
