அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம்! அமெரிக்கர்கள் ஈராக்கை விட்டு வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் அடுத்த ஓரிரு நாட்களில் பாக்தாத் நகரை தாக்கக்கூடும் என பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கத்தூதரகம் ஏப்ரல் 2 இன்று X தளத்தில் பதிவொன்றினையிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
உடனடியாக வெளியேறுமாறும் வலியுறுத்தல்
"ஈரானுடன் இணைந்த ஈராக்கிய குழுக்கள் அடுத்த 24-48 மணி நேரத்தில் பாக்தாத்தின் மையப் பகுதியில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடலாம்," என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கக் குடிமக்கள், வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தூதரக வசதிகள், எரிசக்தி உள்கட்டமைப்பு, ஹோட்டல்கள், விமான நிலையங்கள் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிற இடங்களையும், அத்துடன் ஈராக்கிய நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இலக்குகளையும் குறிவைக்கத் திட்டமிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Security Alert – U.S. Embassy Baghdad, Iraq – April 2, 2026
— U.S. Embassy Baghdad (@USEmbBaghdad) April 2, 2026
Location: Iraq
Iraqi terrorist militia groups aligned with Iran may intend to conduct attacks in central Baghdad in the next 24-48 hours. Iran and Iran-aligned terrorist militias have conducted widespread attacks…
அவசர உதவி
ஈராக்கில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு உதவுவதற்காக, அமெரிக்கத் தூதரகம் (U.S. Mission Iraq) வெளியேற்ற உத்தரவின் பேரில் திறந்தே உள்ளது.
பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில் கொண்டு, பாக்தாத்தில் உள்ள தூதரகத்திற்கோ அல்லது எர்பிலில் உள்ள துணைத் தூதரகத்திற்கோ வர முயற்சிக்க வேண்டாம். அமெரிக்கக் குடிமகனாக இருந்து, உதவி தேவைப்பட்டால், பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை BaghdadACS@state.gov என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது எர்பிலில் உள்ள துணைத் தூதரகத்தை ErbilACS@state.gov என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
எனவே அமெரிக்க மக்கள் எந்த சூழ்நிலையிலும் நாட்டிற்கு பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam