அமெரிக்காவை நிலைகுலைய வைத்துள்ள பனிப்புயல் - 19 பேர் பலி
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10 இலட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களும் கனேடிய நாட்டவர்களும் இம்முறைகிறிஸ்மஸ் தினத்தை மின்சாரம் இல்லாமல் கொண்டாடுகின்றனர்.
பாரிய குளிர்கால தாக்கத்துடன் வடஅமெரிக்க மக்கள் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் முதற்தடவையாக நிலவும் மிக மோசமான குளிர்காலம் மற்றும் சூறாவளி தாக்கத்திற்கு மத்தியில் வட அமெரிக்க மக்கள் தமது அன்றாட கடமைகளை செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மொத்தமாக 250 மில்லியன் மக்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 19 மரணங்கள் இதுவரை பதிவாகி உள்ளன.
சூறாவளி தாக்கம் சுமார் 2000 மைல் பரப்பை தாக்குகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதனால் டெக்ஸ்சாஸ் மற்றும் கியூபெக் மாநிலங்களில் ஆயிரக்கணக்கான விமான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்மஸ் தினத்தை
குதுகலமாக கொண்டாட முடியாத நிலை அந்தப் பகுதி வாழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
