இலங்கையை வந்தடைந்துள்ள அமெரிக்க உளவு விமானம்
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier உளவு விமானத்துடன் அதன் ஊழியர்களும் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
குறித்த அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தலையீட்டுடன் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்படுத்தப்படவுள்ள விழிப்புணர்வு
மேலும், தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும் வகையிலும் கடல் எல்லையை கண்காணிப்பது தொடர்பிலும் இதன்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, இந்த வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கை விமானப்படைக்கு சுமார் 22 மில்லியன் டொலர் பெறுமதியான நவீன Beechcraft 360 ER ரக விமானத்தை அமெரிக்க அரசாங்கம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |