நாணய நிதியத்தின் உதவியை பெற இலங்கை என்ன செய்ய வேண்டும்:அமெரிக்க செனட் சபை
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை செய்துக்கொள்ளும் முன்னர் இலங்கை முழுமைப்படுத்த வேண்டிய செயற்பாடுகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் தொடர்பான குழு டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Any @IMFNews agreement with #SriLanka must be contingent on @CBSL independence, strong anti-corruption measures & promotion of the rule of law. Without these critical reforms, Sri Lanka could suffer further economic mismanagement & uncontrollable debt. https://t.co/oMdT7QIwZP
— Senate Foreign Relations Committee (@SFRCdems) July 1, 2022
இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சியை ஊக்குவித்தல் மற்றும் ஊழல்,மோசடிகளை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் ஆகியவற்றை இலங்கை முதலில் முன்வைக்க வேண்டும்.
அப்படியான கடுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளவில்லை என்றால் இலங்கை தொடர்ந்தும் தோல்வியான முகாமைத்துவத்தையும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையையும் எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் குழு கூறியுள்ளது.