வெளிநாடொன்றில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரூபாலி ஹெச். தேசாய் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9-ஆவது சா்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தான் இந்த பதவி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். இது தொடர்பான வாக்கெடுப்பு செனட் சபையில் நடந்து முடிந்துள்ளது. இதில் அவரது நியமனத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்துள்ளனர்.

இந்திய வம்சாவளி பெண்ணின் சாதனை
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி இவரை 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டின் 9 மாகாணங்கள், 2 நிலப்பரப்புகள் என மிகப் பரந்த சட்ட எல்லைகளைக் கொண்டுள்ள அந்த நீதிமன்றத்தில் 29 நீதிபதிகள் சேவையாற்றி வருகின்றனா்.
வழக்கறிஞராக 16 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவர் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri