அமெரிக்க ஜனாதிபதியாக அமோக வெற்றி! வரலாற்று நிகழ்வென ட்ரம்ப் அறிவிப்பு
வெற்றி குறித்து ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவிப்பு
அமெரிக்காவில் புதிய அரசியல் வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 47ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அவரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் அதிகபடியான உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது வெற்றிகாக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி கிடைத்துள்ளது.
என் மீது நம்பிக்கை அளித்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண்போகாது. அமெரிக்க மக்களுக்காக கடுமையாக உழைப்பேன், பிரச்சினைகளை தீர்ப்பேன். அமெரிக்க மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக ட்ரம்ப் வெற்றி
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகி உள்ளார்.
இதனை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான பொக்ஸ் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நேற்று நடைபெற்றன.
இந்நிலையில் அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ்(Kamala Harris) மற்றும் குடியரசு கட்சியின் சார்பில் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டனர்.
அமெரிக்காவிலுள்ள மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.
அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 277 பேரின் ஆதரவை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 பேரின் ஆதவை பெற்றுள்ளார். அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செனட் சபையை கைப்பற்றிய குடியரசு கட்சி
அமெரிக்காவின் செனட் தேர்தலில் 51 ஆசனங்களை வெற்றி பெற்றதன் மூலம் செனட் சபையை கைப்பற்றியுள்ளதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
இன்னும் முடிவுகள் வெளிவராத மாநிலங்களின் நிலவரங்கள் பாரியளவான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவற்றிலும் பல மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல்
அதற்கமைய குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் 277 இடங்களையும் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 226 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவரில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 16 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.