காசாவை நோட்டமிடும் ஆளில்லா விமானங்கள்: பின்னணியில் அமெரிக்கா
ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க ஆளில்லா டிரோன் விமானங்கள் காசாவை சுற்றிவருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு MQ-9 Reaper ரக டிரோன் விமானங்களே பயன்படுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்திலுள்ள அதிநவீன தெர்மல் சென்சார் கேமராக்கள் மூலம் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்தபடி மனித உடலின் வெப்பத்தை வைத்து பிணை கைதிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து இஸ்ரேல் இராணுவத்திற்கு தகவல் அளிக்கும் என கூறப்படுகிறது.
வானில் பறந்தபடி ஏவுகணை தாக்குதல்
மணிக்கு 440 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த டிரோன் விமானத்தால் தொடர்ந்து 27 மணி நேரம் வானில் பறந்தபடி ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு மணி நேரம் இந்த போர் விமானங்களை இயக்க சுமார் ஆறரை இலட்சம் ரூபாய் செலவிட நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
