இலங்கையர்களுக்கு போலி விண்ணப்பங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினர், இலங்கையிலிருந்து வரும் வாடிக்கையாளர்களின் சார்பாக தஞ்சம் கோரி போலியான விண்ணப்பங்களை சமர்ப்பித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
61வயதான சுவைருல் அமீர் (Zuwairul Ameer) மற்றும் 63 வயதான கிளாடெட் பீரிஸ் (Claudette Pieries) ஆகியோரே தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
குறைந்தது 2007ஆம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கையை குறித்த தம்பதியினர் மேற்கொண்டு வந்துள்ளதோடு, நீதிமன்ற ஆவணங்களின் படி, தம்பதியினர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் குறைந்தது 1,000 டொலர்களை வசூலித்துள்ளனர்.
குற்றவியல் முறைப்பாடு
சுவைருலுக்கு எதிரான குற்றவியல் முறைப்பாடு ஒன்றில், அவர் 2020 மே மாதம் இலங்கையில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவரைச் சந்தித்தார் அவர், சுவைருலிடம் இலங்கையில் தவறாக நடத்தப்பட்ட உண்மைக் கதையை கூறினார்.

எனினும் அமீர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, குறித்த இலங்கையர், அவரது நாட்டில் பொலிஸாரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை உள்ளிட்டுள்ளார்.
இதுபோன்ற விபரங்கள் இல்லாவிட்டால் புகலிடம் வழங்கப்பட மாட்டாது என்று சுவைருல், குறித்த இலங்கையரிடம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 2025 பெப்ரவரி 25 ஆம் திகதியன்று குறித்த தம்பதியினருக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
இதன்போது அவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 250,000 டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam