இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த அமெரிக்க பிரஜை : தங்காலையில் சடலம் மீட்பு
தங்காலை பிரதேசத்தில், தீக்காயங்களுடன் அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தங்காலை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தங்காலை பகுதியில் வசித்து வருவதாகவும், உயிரிழந்த நபருக்கு வழமையாக உணவு கொண்டு வரும் பெண் நேற்றைய தினம் உணவு வழங்க வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவர் உயிரிழந்த நிலையில் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தங்காலை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.