தோட்டக்களுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அமெரிக்கர்
அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கைக்கான தனது பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில், அவரது பயணப் பொதியில் 9 மில்லி மீட்டர் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 தோட்டக்கள் மற்றும் அதற்கான ரவை கூடுகளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான வாடகை வாகன சாரதி
அமெரிக்காவில் வாடகை வாகன சாரதியான 38 வயதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தார். இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பயணப்பொதியை, பொதிகளை சோதனையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி சோதனையிட்ட போது, அதில் தோட்டக்கள் மற்றும் ரவை கூடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காலை 6.15 அளவில் சென்ற பொலிஸார் சந்தேக நபரான அமெரிக்கரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தனது ஜப்பான் நாட்டு காதலியுடன் மாலபே பிரதேசத்தில் உள்ள நண்பி ஒருவரின் திருமண வைபவத்தில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை வந்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அமெரிக்கர், அமெரிக்காவில் துப்பாக்கியை பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதிப் பெற்றவர் எனவும் தெரியவந்துள்ளது.



