சம்பந்தனை சந்தித்த அமெரிக்க தூதுவர்: தமிழர் விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்குக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பான விரிவான உரையாடல் இடம்பெற்றது என்று அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
Good discussion w #TNA Leader @R_Sampanthan re the issues facing Tamils & other minority communities in SL. Broad conversation about the way forward to address concerns, explored questions around national identity, reforms, & the community’s demands for accountability & justice. pic.twitter.com/mzIw92Ufrx
— Ambassador Julie Chung (@USAmbSL) July 13, 2023