பிரித்தானியாவையும் விட்டு வைக்காத அமெரிக்கா: ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸாரா சுல்தானா, அமெரிக்காவின் பி-1 (B-1) ரக குண்டுவீச்சு விமானங்கள் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது போரில் பிரித்தானியாவின் நேரடித் தலையீட்டைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இருப்பினும், பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே தளங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகக் கூறி இந்த விமர்சனங்களை மறுத்துள்ளார்.

தற்போதைய நிலையில், ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று அறிவித்தாலும், அங்கிருந்து தாக்குதல் நடத்தப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராகத் தொடங்கியுள்ள "எபிக் பியூரி" (Epic Fury) இராணுவ நடவடிக்கை இரண்டாவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. ஈரானின் முக்கியத் தலைவரான அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
30 கிராமங்களின் குடிநீர் விநியோகம் பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதோடு, அவ்வாறு செய்யத் தவறினால் ஈரானின் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், ஈரான் ஒருபோதும் எதற்கும் அடிபணியாது என்றும், தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடுவோம் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் கெய்ஷ்ம் (Qeshm) தீவில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலை மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் சுமார் 30 கிராமங்களின் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு மனிதாபிமானமற்ற போர் குற்றம் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பிராந்தியங்களில் உள்ள இலக்குகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றன.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்