இலங்கைக்கு அருகில் மூழ்கிய ஈரானிய கடற்படை கப்பல் -அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை - அடுத்து நடக்கபோவது என்ன..!
ஈரானிய போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் புதன்கிழமை இந்தியப் பெருங்கடலில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய ஐஆர்ஐஎஸ் தேனா போர்க்கப்பலை மூழ்கடித்தது.
இதன்போது பலர் பலியானதுடன் ஏனையவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து, இலங்கை இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் பூஷெரிலிருந்து 208 பணியாளர்களை மீட்டது.
இந்தநிலையிலே அமெரிக்கா இவ்வாறானதொரு அழுத்தம் கொடுத்துள்ளது.
ஈரான் தாக்குதல்கள் முடியும்வரை அவர்களை இலங்கையிலே வைத்திருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இந்த விடயத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றமும் அச்சமும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் எடத்த வருகின்றது News Insight தமிழ் நிகழ்ச்சி..