இலங்கைக்கு மேலும் ஒரு கப்பலை வழங்கப்போகும் அமெரிக்கா
2026 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றொரு கடலோர காவல்படை கப்பலை இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இலங்கையின் அமெரிக்க தூதரகம், இதனை அறிவித்துள்ளது.
தற்போது, இலங்கை கடற்படையில், விஜயபாகு என்ற கப்பல் உட்பட்ட, அமெரிக்க கடலோர காவல்படையின் மூன்று முன்னாள் சேவையில் உள்ளன.
நான்காவது கப்பல்
அவை, இப்போது நாடு கடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்கும், இந்தோ-பசிபிக் பகுதியில் இலங்கையின் இறையாண்மையை நிலைநிறுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

நான்காவது கப்பல், 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 2024 ஒக்டோபரில், இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை அதன் சொந்த நீர்நிலைகளில் ரோந்து செல்வதற்கும், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், இந்தியப் பெருங்கடலில் முக்கிய வர்த்தக வழிகளைப் பாதுகாப்பதற்கும் முக்கிய திறன்களை வழங்குவதற்காக அமெரிக்கா பீச்கிராஃப்ட் கிங் ஏர் கடல்சார் ரோந்து விமானத்தையும், அமெரிக்கா வழங்கியதாக, தூதரகம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 20 மணி நேரம் முன்
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri