இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
இலங்கையின் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கும், இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி அலுவலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் வேலைத்திட்டத்தின் நிதி மற்றும் நிர்வாகத் தேவைகளை நிறைவு செய்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான எதிர்கால ஒத்துழைப்பு போன்ற இருதரப்பு விடயங்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பிராந்திய அமைதி
பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான தற்போதைய நடவடிக்கைகளுக்காக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இணங்கியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
