இலங்கை தமிழர் விடயத்தில் அமெரிக்காவின் முக்கிய நகர்வு! முடிவெடுப்பதில் சிக்கல் (Video)
இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு எதிராக தடை விதித்திருக்கும் அமெரிக்காவின் தற்போதைய செயற்பாடு மனித உரிமை பிரச்சினையையும் அதே சமயம் அரசியல் ரீதியான நோக்கங்களையும் கொண்டதாகவே தோன்றுகின்றது என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் கலாநிதி கீத பொன்கலன்(Keethaponcalan) தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பூகோள ரீதியான அரசியலில் இலங்கையினுடைய அண்மைக்கால போக்குகள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக பல அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
உண்மையிலேயே சர்வதேச ரீதியான அழுத்தங்கள் இலங்கையை அச்சுறுத்துகின்றதா அல்லது சமரச அடிப்படையில் இலங்கை அரசுக்கு அச்சுறுத்தல் போன்ற ஒரு மாயையை வெளிப்படுத்துகின்றதா என்ற பல்வேறுபட்ட ஐயப்பாடுகள் இருக்கின்றன.
இவை தொடர்பிலும் அரசியல் நிலைப்பாட்டில் உலக அரங்கில் இலங்கையினுடைய முக்கியத்துவம் எப்படி இருக்கின்றது. இன்றைய நாட்களில் அமெரிக்காவினுடைய செயற்பாட்டில் ஒரு சில இராணுவ அதிகாரிகளின் மீதான தடையின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் பேராசிரியர் கீத பொன்கலன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,