இறுதி போரில் அமெரிக்காவின் சதி!பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
தமிழ் மக்களின் சுய உரிமை பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் இந்த நாட்டில் ஒன்றாக வாழும் மக்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களின், உரிமை பாதுக்கப்படும் வகையில் வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு வந்த ஒன்பது கப்பல்களை எமது படையினர் வெற்றிகரமாக அழிப்பதற்கு அமெரிக்கப் புலனாய்வுத் தகவல்கள் உறுதுணையாக அமைந்தது என்பதை மறந்து விடக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான நல்லுறவுக்கு, முன்னாள் வெளிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் செயல்பாடுகள் மிகவும் காத்திரமானதாக அமைந்தது என்றும் மறந்து விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,



