டொனால்ட் ட்ரம்பிற்கு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு: ஆதரவாக களமிறங்கிய விவேக் இராமசாமி
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் இராமசாமி குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சான்றிதழ் அளிக்கப்படும் போது, ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மற்றும் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த போராட்டத்திற்கு தூண்டுதலாக ட்ரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ட்ரம்பிற்கு தடை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அத்துடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலை வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டில் ட்ரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ட்ரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவேக் ராமசாமி அதிரடி
இந்நிலையில், குடியரசு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் உள்ள விவேக் ராமசாமி, ட்ரம்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் இராமசாமி, இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த தீர்ப்பை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ட்ரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
